பொதுவாக, டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்குப் பிறகே திறக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால், இந்த மதுபான பார் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், குடிமகன்கள் காலையிலேயே மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடிப்போய் வெளியேறுவதும், சோதனை சாவடி அருகே சாலையில் நின்று பேசிக் கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்