கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில், சட்டசபையில் உதயநிதி சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு நல்ல புத்தி கிடைக்க வேண்டி இன்று தோப்புக்கரணம் போட்டு பிரார்த்தனை போராட்டம் நடைபெற்றது. சனாதன தர்மம் குறித்த விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்களும் இதை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். விஜய் உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.