கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்றது. காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களில் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பணியாளர்கள் சாலையில் அமர்ந்து, படுத்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் தலையீடு செய்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.