திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சேர்ந்த ஓட்டுநர் துரைசாமி, 19 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், மதுபோதையில் சாலை கடந்த நபர் மோதி இறந்த விபத்து வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்டார். 145 நாட்கள் பணி வழங்காததாக அவர் தொடுத்த வழக்கில், முதல் தவணையாக ரூ. 32 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. போக்குவரத்துத் துறை அந்த தொகையை வழங்காததால், நீதிமன்ற ஊழியர்கள் பேருந்தின் கண்ணாடிகளில் நோட்டீஸ் ஒட்டி பேருந்தை ஜப்தி செய்தனர்.