கோவை சிறுமி கொலை வழக்கு: மோகன்ராஜுக்கு ஜூன் 5 வரை சிறை

கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டாவது குற்றவாளியான மோகன்ராஜை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் இன்று (மே 27) ஜூன் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். ஏற்கனவே மற்றொரு குற்றவாளி கார்த்திக்கும் இதேபோல் காவல் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி