கோவை சிறுமி கொலை வழக்கு: குற்றவாளி சிறையில் அடைப்பு

கோவை சூலூரில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி, போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து கை, கால் முறிவுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். உடல்நிலை முன்னேறியதைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு இன்று மாற்றப்பட்டான். கார்த்தி மற்றும் மோகன்ராஜை ஜூன் 5 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி