கோவை: குப்பை கொட்டினால் அபராதம்; ஒலிப்பெருக்கிகள் மூலம் எச்சரிக்கை

கோவை மாநகராட்சி பகுதிகளில், பொதுமக்கள் குப்பையை தரம் பிரிக்காமல் கொடுத்தல் மற்றும் பொதுவெளியில் குப்பை கொட்டும் செயல்களை தடுக்கும் வகையில், துாய்மை பணியாளர்களின் தள்ளுவண்டிகளில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன. 

மாநகராட்சியில் தினசரி 1,250 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் குப்பை தேங்கி சுகாதார பிரச்னைகள் உருவாகி வருகின்றன. இதை கட்டுப்படுத்த 4,650 ஒப்பந்த பணியாளர்கள் வீடுகளில் குப்பையை தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். இருப்பினும் அலட்சியமான நிலைமை தொடருகிறது. 

இதனை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கைகள் விடுத்து, ரூ.500 முதல் அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 100 வார்டுகளிலும் இந்த நடவடிக்கை நடைமுறையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி