கோவை காரமடைப் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ரூ. 1 கோடியே 41 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், மேலாளர் கார்த்திகேயன் மற்றும் ஏஜென்ட் ஸ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல், கணக்குகளைப் பொய்யாகப் பதிவு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விஜயா அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். தலைமறைவாக உள்ள அருண்குமார் என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.