கோவை: போலி ரசாயன பசை தயாரிப்பு: தொழிற்சாலை சீல்

பிரபல நிறுவனத்தின் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி ரசாயனப் பசை தயாரித்த தொழிற்சாலை மீது அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு குழுவினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் நேற்று நடந்த சோதனையில், போலி பசை மற்றும் முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. டெல்லி நீதிமன்ற உத்தரவின் பேரில் தேஜாராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி