கோவை: மனவேதனை.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

அதிமுகவில் இருந்து அனைத்து பதவிகளும், அடிப்படை உறுப்பினர் பதவியும் நீக்கப்பட்டதனால் தமக்கு மனவேதனை ஏற்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் நேற்று (நவ.25) செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தனை ஆண்டுகள் இயக்கத்திற்காக உழைத்த எனக்கு கிடைத்த பரிசு, அடிப்படை உறுப்பினராக கூட இருக்கக்கூடாது என்பதே என வருத்தம் தெரிவித்தார். இதனிடையே இன்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி