கோவை: குடிநீர்தொட்டி- சீரமைக்க முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை

கோவை மாவட்டம் சூலூர் அருகே டிபன்ஸ் காலனியில் வசிக்கும் விமானப்படை ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்கள், 2019ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால் அவதிப்படுகின்றனர். தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் குடிநீர் பற்றாக்குறை தீரும் என மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அதிகாரிகள் உடனடியாக தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என முன்னாள் ராணுவத்தினர் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி