கோவை: நெகமம் அருகே மூதாட்டி, பேத்தி குத்திக்கொலை

கோவை மாவட்டம் நெகமம் அருகே, பெண் தர மறுத்ததால் ஏற்பட்ட விரோதத்தில் 19 வயது இளைஞர் அபிஷேக், 17 வயது சிறுமி மற்றும் 60 வயது மூதாட்டியை கத்தியால் குத்திக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடிய அவர், நேற்று நள்ளிரவு விஷம் அருந்திய நிலையில் நெகமம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி