எங்களை நம்பி தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளன. ஆனால், தற்போது காங்கிரஸ் ஆதரவாளர்களான ஒப்பந்ததாரர்கள் செய்த பணிகளுக்கு அதிகாரிகள் பணி ஆணை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால், தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை எங்களுக்கு வழங்காமல், விதிகளை மீறி வேறு நபர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இணையதளம் மூலமாக 30-க்கும் மேற்பட்ட பணிகளை இவ்வாறு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்று அவர் கூறினார்.