கோவை பெரியநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள விழுதுகள் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த வாழ்வு சேவை மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை, ஆலோசனை, மறுவாழ்வு சேவைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வில் மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.