கோவை: வெள்ளியங்கிரி மலை - பக்தர் மூச்சுத்திணறலால் உயிரிழப்பு

தென்கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலையில் மலையேற்றத்தின் போது திருச்சியைச் சேர்ந்த பக்தர் தேசிங்கு ராஜன் மூச்சுத்திணறலால் நேற்று உயிரிழந்தார். மகா சிவராத்திரி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வரும் நிலையில், ஐந்தாவது மலை சந்தனமலை பகுதியில் நேற்று மாலை இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. நண்பர்களுடன் ஆன்மீகப் பயணமாக வந்த அவர், செங்குத்தான பாதையை கடக்கும் போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி