மேலும், சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை அழிக்கவே இத்தகைய தகவல்கள் பரப்பப்படுகின்றன என குற்றம்சாட்டினார். 2009-ல் பரவிய டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களுக்கு நிலவேம்பு கசாயம் பெரும் பயன்பாடு செய்ததைக் கூறிய அவர், 2014-ம் ஆண்டு அப்போது முதல்வரான ஜெயலலிதா இதற்கு அனுமதி வழங்கியதாகவும், 2020-ல் கொரோனாவுக்கு தடுப்பாக தனது வாகனத்திலேயே நிலவேம்பு கசாயம் விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் இந்த கசாயத்தின் மகிமையை எடுத்துரைத்த பிறகு, அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறினார். இஞ்சி, பூண்டு, தேன் போன்றவற்றுக்கு கூட அனுமதி இல்லை என கூறுவது பொய். இதற்காக கொலை மிரட்டல் ஏற்பட்டதால் போலீசார் எனக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர் என்றும் அவர் நேற்று தெரிவித்தார்.