கோவை: குக்கர் வெடித்து இளைஞர் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த பழனியப்பனின் மகன் ஜோஷித் (வயது 19), இவர் கோவை பெரியக்கடை வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 

நேற்று முன்தினம் (ஜன.2), தான் தங்கியிருந்த அறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக குக்கர் வெடித்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உக்கடம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி