பொள்ளாச்சி வடுகபாளையத்தில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு மாணவி அஸ்விதா (19) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இவர் திருமணத்திற்கு மறுத்ததாகக் கூறப்படும் காதலன் பிரவீன்குமார் (23), மேற்குக் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அஸ்விதா வீட்டில் தனியாக இருந்தபோது சம்பவம் நடந்தது. மாலை வீடு திரும்பிய பெற்றோர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த நிலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிரவீன்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.