கோவை பகுதியில் நகராட்சிகளில், ஒருபுறம் சாலை அமைத்துக் கொண்டு போனால், ஒருபுறம் வடிகால் அமைப்பவர்கள் தோன்றுகிறார்கள், அந்தப் பணிகள் முடிந்ததும் குடிநீர் குழாய்க்கு குழிகள் தோண்டப்படுகிறது. அநாதை குழந்தை மன நிலைமையில் கோவை மாநகராட்சியின் நிர்வாகம், பொறுப்பற்ற நிர்வாகமாக செயல்படுகிறது.
அதேபோல இன்று(பிப் 9) காலையில் கூட நான் ஒரு மருத்துவரை சந்தித்தேன், 2004-ல் அவருக்கு விதிக்கப்பட்ட வீட்டு வரி 2400 ரூபாய், ஆனால் இன்று அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நோட்டீஸில் 56000 ரூபாய் கட்ட வேண்டும் என்று வந்திருக்கிறது. இதுபோன்று அனைத்து வீடுகளுக்கும் நோட்டிஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சாடினார்.