இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக சார்பில் நேற்று முதல், அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில், பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு மாவட்டம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில், பாரதிய ஜனதாவின் மூத்த நிர்வாகி ஹெச். ராஜா கலந்து கொண்டு பேசினார். அதேபோல மாநிலச் செயலாளர் மலர்கொடி, கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்த ராஜன், கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!