ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் நடைபெறும் இந்த சந்தையில், திமுக நிர்வாகிகள் சிலர் கடைகளை குத்தகைக்கு எடுத்து, ரூ. 100 முதல் ரூ. 200 வரை வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த மூதாட்டியிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமார், மிளகாய் தட்டுகளை எறிந்துள்ளதாக கூறப்படுகிறது. மூதாட்டியின் கண்கலங்கிய தருணத்தை பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருவோர வியாபாரிகள் பாதுகாப்பிற்கான மத்திய சட்டம் மற்றும் மாநில விதிகளின் கீழ் ஏன் பாதுகாப்பு இல்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி