குறிச்சி ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து நடத்துனர் ஹரிகிருஷ்ணன், கோவை - திருச்சி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனது பேருந்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மனோஜ் அங்கு வந்து, பேருந்தை இங்கு நிறுத்தக்கூடாது எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மனோஜ் அரிவாளை எடுத்து ஹரிகிருஷ்ணனை வெட்டினார். இதில் ஹரிகிருஷ்ணன் படுகாயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜை கைது செய்தனர்.