கோவை: விமான நிலையமா? பார்க்கிங் மைதானமா? - பயணிகள் குமுறல்

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு அரசியல் பிரமுகர்களை வரவேற்க வரும் ஆதரவாளர்கள், பிரதான நுழைவாயில், சாலை ஓரங்களில் வாகனங்களை விதிமீறி நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள், குறிப்பாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். விமானங்களை தவறவிடும் நிலையும் உருவாகுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள், போக்குவரத்து போலீஸ், விமான நிலைய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி