கோவை: அதிமுக உடைப்பு நோக்கமல்ல - லீமா ரோஸ் பேட்டி

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ லீமா ரோஸ், பணம் கொடுத்து கட்சியை உடைக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார். மேலும், பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்று சேர்க்கும் முயற்சிதான் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் அனைவரும் இணைவோம் என்றும் தெரிவித்தார். மக்களின் முன்னேற்றத்திற்காகவே தவெக கூட்டணியில் இணைந்ததாகவும், 'புதுமைப்பெண்', 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு திட்டங்களை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி