யானை, தோட்டத்தைச் சுற்றியிருந்த மின்வேலியை எளிதாகத் தாண்டி வெளியே சென்ற காட்சி அருகில் இருந்தவர்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
குறிப்பாக காட்டு யானைகள் அதிகளவில் இருப்பதால், மனித-யானை மோதல்கள் தவிர்க்க முடியாததாகி வருகிறது. இந்த சம்பவம், வனத்துறையினர் மனித-யானை மோதலைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும் விவாதம் எழுந்துள்ளது.