கோவை: விபச்சார வழக்கில் 2 பேர் கைது

துடியலூர் அருகே சோதனை நடத்தி 2 பேரை ஞாயிறு அன்று போலீசார் கைது செய்தனர். கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில், வடமதுரை வி. ஐ. பி. காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இளம்பெண்ணை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, புரோக்கராக செயல்பட்ட அசோக்குமார் (28) மற்றும் இளம்பெண் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி