கோவை மாவட்டம், நெகமம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் (34) என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். காக்கடவு பேருந்து நிறுத்தம் அருகே நடத்தப்பட்ட சோதனையில், 149 கிலோ புகையிலை பொருட்கள், ரூ. 29,000 பணம் மற்றும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.