அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட மசகவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், குடுகுடுப்பைகாரர்கள் போல் நடித்து பெண்கள், முதியோரை குறிவைத்து ஏமாற்றி நகை, பணம், ஆடு, கோழிகள் உள்ளிட்டவற்றை அபகரித்த 7 இளைஞர்கள், 4 பெண்கள் கொண்ட குழுவினரை பொதுமக்கள் பிடித்து அன்னூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மறுநாள் குடும்பப் பிரச்சனை, பரிகாரம் பெயரில் சிலரிடம் பொருட்களை பெற்றதோடு, ஆள்கள் இல்லாத வீடுகளில் திருட்டும் நடத்தியதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.