பின்னர் ரயில் மூலம் கோவை வந்தடைந்த அவர்கள், அங்கிருந்து காரில் பாலக்காடு நோக்கிப் புறப்பட்டனர். க. க. சாவடி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, ஒரு கும்பல் லாரியை குறுக்கே நிறுத்தி, அவர்கள் வந்த காரை வழிமறித்துள்ளது.
பின்னர் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், சிறிது தூரம் காரை ஓட்டிச் சென்றுள்ளனர். ஜெய்சன் மற்றும் விஷ்ணுவை காரிலிருந்து கீழே இறக்கிவிட்டு, தங்கக்கட்டியுடன் காரையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக க. க. சாவடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.