சேலம் கோட்ட ரயில்வேயில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம் - டாட்டா நகர் எக்ஸ்பிரஸ்(18190) ரயில் வரும் 3, 5, 7 ஆகிய தேதிகளில் போத்தனுார், கோவை, திருப்பூர் வழியாக இயக்கப்படும். கோவை - ஈரோடு இடையே ரயில் இயக்கம் 50 நிமிடம் ஒழுங்குபடுத்தப்படும். அதேபோல் வரும் 3, 5, 7ம் தேதிகளில், ஆலப்புழா - தன்பாத்(13352) எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் 45 நிமிடங்கள் ஒழுங்குபடுத்தப்படும் என சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது.