பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மேற்கண்ட அலுவலகங்களில் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம். பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விசாரணை செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு 26-ஆம் தேதி நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இன்று தெரிவித்துள்ளார். எனவே, கரியாம்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு.. இபிஎஸ் கண்டனம்