ஆழியார் அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு நீர் திறப்பு

ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு முதல் போக பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனைமலை அருகே உள்ள ஆழியார் அணையின் நீர்மட்டம் 62.40 அடியாக உள்ள நிலையில், 6,400 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் அக்டோபர் 15 வரை 152 நாட்களுக்கு, 1205 மில்லியன் கனஅடி நீர் ஐந்து வாய்க்கால்கள் மூலம் திறக்கப்படுகிறது. நீர்வளத்துறை செயல் பொறியாளர் தண்டபாணி, உதவி பொறியாளர் ராஜாகண்ணன் மற்றும் விவசாயிகள் முன்னிலையில் மலர் தூவி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி