கிணத்துக்கடவு பொன்மலை கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் மாயம்

கோவை, கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் காணாமல் போனதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மலைப்பாதையில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் மண்டபத்தில் இருந்த கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு தற்போது முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. 

கேமராக்கள் இல்லாததால், அப்பகுதியில் சிலர் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பக்தர்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக புதிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவ கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி