பகுத்தறிவே முக்கியம் - கோவையில் கனிமொழி எம். பி பேச்சு

கோவை பேரூர் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற சுயமரியாதை திருமண விழாவில் பேசிய தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, பெண்கள் கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் பகுத்தறிவின் அவசியத்தை வலியுறுத்தினார். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஏ.ஐ போன்ற சமூக ஊடக தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாமல், அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என்றும், சாட்ஜிபிடி கூட தவறான பதில் தரும் என்பதால் பகுத்தறிவே முக்கியம் என்றும் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் தோல்வியை மக்கள் தீர்ப்பாக ஏற்றுக்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி