பீளமேடு: பஸ் விபத்து - கல்லூரி மாணவர் பலி

கோயம்புத்தூர் அருகே பீளமேடு பகுதியில் தனியார் ஆம்னி பஸ் மோதி டிப்ளமோ மாணவர் கோவர்த்தன மணிபாரதி (19) நேற்று உயிரிழந்தார். சென்னிமலையைச் சேர்ந்த இவர், மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்குச் செல்லும்போது விபத்து நேர்ந்துள்ளது. பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி