கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கும் அதேபோல் உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு பாதை தடை செய்யப்பட்டது. அதனால் ஆகஸ்ட் 1 ஒரு நாள் மட்டும் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.