கோவை அரசு மருத்துவமனையில் நேற்று (மே 29) நள்ளிரவில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் பதிவேடுகள், நோயாளி சேவைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் நேரில் பார்வையிட்டார். மருத்துவ பணியாளர்களின் வருகை, நோயாளிகளுக்கான சிகிச்சை நிலை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், சேவைகள் தடையின்றி நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.