இதனை பயன்படுத்தி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அதிக பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்குவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.