கொலை வழக்காக மாற்றப்பட்ட இந்த வழக்கில், ருக்ஷனாவின் காதலர் பிரசாந்த், திருமணத்திற்கு மறுத்ததால், கல்லாறு பகுதியில் தள்ளி, கல்லால் தலையில் தாக்கி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் பிரபு ஆஜராகி வாதாடினார். இறுதியில், நீதிபதி சிவகுமார், பிரசாந்திற்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை மற்றும் கூடுதலாக ஒரு வருட சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.