கோவை: பள்ளி பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது அக்ஷய்குமார், கோவை ஒலம்பஸ் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, காளப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வெள்ளிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, புலியகுளம் ரெட்பீல்ட் பகுதியில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. நிலைத்தடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஏறியதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி