கோவை: இளம்பெண் தூக்கிட்டு உயிரிழப்பு

கோவை காட்டூர் ராமநாதபுரம் விவேகானந்தர் சாலை பகுதியில் 19 வயது இளம்பெண் ஸ்ரீ கெளரி, வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளங்கலை படிப்பை முடித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்த அவர், குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நேரத்தில் இந்த துயர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். குடும்பத்தினர் திரும்பி வந்து கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டனர்.

தொடர்புடைய செய்தி