கோவை சாடிவயல் பகுதியில் 35 வயது காட்டு யானை ஒன்று நேற்று கிணற்றில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தது. தகவல் அறிந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் யானையின் உடலை மீட்டனர். இந்த யானை கடந்த மூன்று ஆண்டுகளாக பகுதியில் சுற்றி வந்ததாகவும், இதனை வனத்துக்குள் திருப்பி விட வேண்டும் என்று மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊருக்குள் யானைகள் புகுந்து விவசாய பயிர்கள், வீடுகள் சேதமாகி வருவதால், மக்கள் வனத்துறையை கண்டித்துள்ளனர். தற்போது ஒரு வாயில்லா உயிரின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.