கோவை: கழிவு பஞ்சு விலை உயர்வு: 2 நாள் விடுப்பு

கழிவு பஞ்சு விலை கிலோவுக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்ந்துள்ளதால், நூற்பாலைகளின் இயக்கச் செலவு அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு நூல் வழங்கும் ஸ்பின்னிங் மில்கள், நூல் விலையை உயர்த்த முடியாமல் தவிக்கின்றன. நிலைமை சீராகும் வரை சில மில்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி