கோவை: வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று எர்ணாகுளம் –பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயில் கோயம்புத்தூர் வழியாக சென்றபோது, கோவை ரயில் நிலையத்தில் அதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை மாநகர மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், சேலம் கோட்டை ரயில்வே மேலாளர் பன்னாலால், கூடுதல் மேலாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்கள் தேசப்பற்றுக் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். வந்தே பாரத் தொடர்பான ஓவியம் மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ரயில்வே மேலாளர் பன்னாலால், இந்த ரயில் சேவை பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். கூடுதல் மேலாளர் சரவணன், குறைந்த நேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்றும், ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். போத்தனூர் ரயில் நிலையம் ரூ. 98 கோடி மதிப்பில் டெண்டரில் உள்ளது. கோவை–சென்னை வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகள் விரைவில் 16 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி