கோவை: ரயில்பாதை திட்டத்திற்கு நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர்

கோவை இருகூர்-போத்தனூர் இடையேயான 10.77 கி.மீ ரயில்பாதையை இருவழியாக்கும் திட்டத்திற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் சார்பில் ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி