கோவை வடகோவை – பீளமேடு ரெயில் நிலையங்களுக்கு இடையில் இன்று தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றபோது, ஜல்லிக்கற்கள் ஏற்றிச் சென்ற பராமரிப்பு வாகனம் டெக்ஸ்டூல் பாலம் அருகே தடம் புரண்டது. இதனால் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டு, மதியம் 2 மணிக்குள் வாகனத்தை மீட்டு, சோதனை ஓட்டம் நடத்தி தண்டவாளம் பாதுகாப்பானது என உறுதி செய்த பிறகு ரயில் சேவையை மீண்டும் தொடங்கினர். இந்த விபத்தால் ஆலப்புழா – தன்பாத்து ரயில் 8 நிமிடங்களும், பெங்களூரு – கேரளா இன்டர்சிட்டி ரயில் 6 நிமிடங்களும் தாமதமாயின. பராமரிப்பு வாகனத்தில் பெரிய சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.