கோவை மண்டல ஐஜி ரம்யா பாரதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ். பி. உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் விக்னேஷ், சூலூர் சிறுமி கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் தொலைபேசியில் குடும்பத்தினருடன் பேசி இரங்கல் தெரிவித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும், ஜீரோ டார்க் ஸ்பாட் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு குறைபாடுள்ள இடங்களில் சிசிடிவி மற்றும் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.