கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த 65 வயது விவசாயி ஜெனிட்டா தனது தோட்டத்து வீட்டில் ஆடுகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். கடந்த 4-ம் தேதி இரவு அவர் தூங்கிய பின், மர்ம நபர்கள் பட்டியில் இருந்த 2 ஆடுகள் மற்றும் 2 கோழிகளைத் திருடிச் சென்றனர். ஜெனிட்டா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திருடர்கள் பயந்து தாங்கள் திருடிய ஆடுகள் மற்றும் கோழிகளை இன்று அதிகாலையில் ஜெனிட்டாவின் வீட்டில் விட்டுச் சென்றனர். மறுநாள் காலையில் அவற்றைப் பார்த்து ஜெனிட்டா மகிழ்ச்சியடைந்தார்.