மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நெல்லித்துறை உள்ளிட்ட மலையோர கிராமங்களில் பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை, மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் காணப்பட்டதால் உள்ளூர் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு, இந்த யானை குடியிருப்பு வழியாக உலா வந்து விவசாய நிலங்கள் வழியாக சென்றது. சிலர் இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால், அது வைரலாகி வருகிறது. பொதுமக்கள் அச்சமின்றி இருக்கவும், யானையின் இயக்கம் கண்காணிக்கப்படுகிறது என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.