கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 45 நாட்கள் சூரிய மின்பலகை (சோலார் பேனல்) பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. பயிற்சியை முடிக்கும் இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு கழக அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். தகுதியான இளைஞர்கள் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.